தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாததால் வேறு சாதனை செய்ய முயல்கிறேன்!

-மூதூர் நிருபர்-

இலங்கையின் கரையோரப் பகுதியைச் சுற்றி நடைபயணத்தை ஆரம்பித்த 11 வயது சிறுவன் இன்று திங்கட்கிழமை மூதூரை வந்தடைந்தார்.

கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து நடை பயணத்தை ஆரம்பித்து 6வது நாள் மூதூரை வந்தடைந்துள்ளார்.

தான் 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லையெனவும் அதற்காக இப்படி ஒரு சாதனையை புரிய வேண்டுமென்பதற்காகவே நாட்டை சுற்றி கால்நடை பயணத்தை மேற்கொள்வதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்தார்.