தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன இலங்கை

பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம்  அறிவித்துள்ளது .

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது.

நாடு முழுவதும் 2ஆயிரத்து 787 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது.307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் .

இதேநேரம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன .

கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், மாத்தளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 134 எனவும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 132 எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 131 எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.