தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வழக்கு : எதிர்வரும் 31 ஆம் திகதி தீர்ப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மனுக்கள் யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் மூன்று நாட்களாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் மற்றும் பிரதிவாதி சார்பில் அனைத்து சட்டத்தரணிகளின் வாய்மொழி விவாதங்கள் தற்போது முடிவடைந்துள்ளது.
எழுத்துப்பூர்வ உரைகள் இருப்பின் அவற்றை நாளை காலை 9 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மனுக்கள் தொடர்பான முடிவு எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்