
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
-அம்பாறை நிருபர்-
கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கமு/ கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஏனைய அதிதிகளாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் எம்.ரி.எம்.அனப் உட்பட ஏனைய உறுப்பினர்கள் பாடசாலை பழைய மாணவ மாணவிகள் அமையத்தின் பொருளாளர் ஏ. ஹஸீனா பானு உப செயலாளர் எம். எம். ஷமீலுள் இலாஹி உதவிப்பொருளாளர் காமிலா காரியப்பர் பெற்றோர் தர வட்டத்தின் தலைவர் யு.எல்.எம் ஹாஜா உட்பட ஏனைய பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பெற்றோர் சங்க உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் மாணவர்கள் என கலந்து சிறப்பித்தனர்.
2022 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70க்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தி பெற்ற மாணவர்களுக்கும் வெட்டுப்புள்ளிக்கு அண்மித்த மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பும் பாடசாலைக்கு கோப்பு அலுமாரி(சுமார் 38 ஆயிரம் பெறுமதியான) ஒன்றினை தரம் 5 பெற்றோர் தர வட்டம் அன்பளிப்பு செய்த நிகழ்வும் இடம்பெற்றது.
தரம் 5 பெற்றோர் தர வட்டம் அன்பளிப்பு செய்த கோப்பு அலுமாரி, பாடசாலை அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியாவிடம் உத்தியோகபூர்மாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி கைளித்தார்.
குறித்த நிகழ்வில் அதிதிகளை வரவேற்று மாணவர்கள் மாலை அணிவித்தல் கிராஅத் ஓதுதல் தேசிய கீதம் பாடசாலை கீதம் ஆகியன இசைக்கப்பட்டு தலைமை உரை வரவேற்பு உரையும் இடம்பெற்றன.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி பொன்னாடை போர்த்தி பாடசாலை சமூகத்தினால் பாராட்டப்பட்டார்.
இறுதியாக மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்கள், பதக்கங்கள் என்பன வழங்கப்பட்டதுடன் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.