தரம் 06 பாடப்புத்தக விவகாரம் : கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமே காரணம்!

தரம் 06 ஆங்கிலப் பாட  தொகுதியில் ஆபாச இணையத்தளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய கல்வி நிறுவகத்தினால் ஆரம்பக்கட்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்த விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய தேசிய கல்வி நிறுவகத்தின் இரண்டு பெண் அதிகாரிகளின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு மேலதிகமாக தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தைக் கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ். தரம் 06 ஆங்கிலப் பாட தொகுதியில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் உரிய முறைமையின்றி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தேசிய கல்வி நிறுவகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் இது கண்டறியப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.