தரம் ஒன்று மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகும் திகதி!

அரச,அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகின்றன.

இதன்படி, சகல பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 2025ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேநேரம் இந்த ஆண்டு தரம் ஒன்றுக்காக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.