தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கை

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கையை கல்வி அமைச்சு தயாரித்துள்ளது.

அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு இந்த சுற்றறிக்கை திருத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக அமைச்சின் திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்குமாறு இந்த முன்மொழிவில் கோரப்பட்டுள்ளது.