தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை – வர்த்தகர்கள் மீது முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்

பண்டிகைக் காலத்தில் கடைகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கும்போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்டத்தை மீறி, தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்..

அந்தப் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட பொது சுகாதார ஆய்வாளர்களின் தொலைபேசி எண்களை www.phi.lk என்ற இணையதளத்தில் பெறலாம் அல்லது 0112 635675 என்ற எண்ணுக்கு புகார்களை தெரிவிக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.