தம்மை விமர்சிப்பதால் எந்த நல்ல விடயங்களும் மலையக மக்களுக்கு நடக்கப்போவதில்லை – ஜீவன்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சில விடயங்களை மேல் மட்ட உறுப்பினர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் இன்று  வியாழக்கிழமை உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

தம்மை விமர்சிப்பதால் எந்த நல்ல விடயங்களும் மலையக மக்களுக்கு நடக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட தனது வாழ்க்கை தொடர்பில் பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

மலையகத்தில் சபைகளை கைப்பற்றும் போது எந்த இடத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்இ தேசிய மக்கள் சக்தியை கைவிடவில்லை என ஜீவன் சுட்டிக்காட்டினார்