
தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்?
தேசிய பட்டியலினூடாக தெரிவாகியுள்ள பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாளை செவ்வாய்க்கிழமை காலை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தம்மிக்க பெரேராவுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
