தம்புள்ளை சுற்றுலாத்தளங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை

தம்புள்ளையில் காணப்படும் சுற்றுலாத்தளங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, தம்புள்ளை ரஜமகா விகாரை, தம்புள்ளை உயவத்த ரஜமகாவிகாரை மற்றும் சுற்றுலாத்தளங்கள், உணவகங்கள் என்பவற்றில் விசேடப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.