
தம்பஹிட்டிய துப்பாக்கிச் சூடு : 3 சந்தேகநபர்கள் கைது
மீடியாகொட – தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் கடந்த 3ஆம் திகதி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு இருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மீடியாகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு ஒத்துழைப்பை வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீடியாகொட மற்றும் கஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 27, 40 மற்றும் 44 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீடியாகொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்