
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு
-கிண்ணியா நிருபர்-
தம்பலகாமத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த தபால் மூல வாக்களிப்பில் அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
அமைதியான முறையில் இடம் பெற்ற தபால் மூல வாக்களிப்பின் போது மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், உதவி தெரிவத்தாட்சி அலுவர் உள்ளிட்டோர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்