தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழா!

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழா இன்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவிகளால் கலை கலாசார நிகழ்வும் இடம் பெற்றது.

நிகழ்வின் விசேட பூஜை வழிபாடுகளை சிவசிறீ கதிரவேற்பிள்ளை பரபி ரமஜோதி நிகழ்த்தினார்.

இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர உட்பட சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்..