தம்பலகாமம் பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட இளம் குடும்பஸ்தர்!
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் (வயது 24) உடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் கந்தளாய் வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் .குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
