தம்பலகாமத்தில் வீடு தீப்பற்றியதில் முற்றாக சேதம்
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் நடுப்பிரப்பந் திடல் கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீடொன்று தீப்பற்றி எறிந்ததில் முற்றாக சேதமடைந்துள்ளது.
திருகோணமலை மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவுக்கு அறிவித்த நிலையில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்கள் உட்பட உள்ளிட்ட பல தளபாடங்கள் என பல இலட்சக்கணக்கு பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
குறித்த சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் இலங்கை மின்சார சபையினர் மின்சாரம் தொடர்பில் பரிசோதித்துள்ளனர். இது மின் கசிவா அல்லது திட்டமிடப்பட்ட சதியா ? என்பது பற்றி பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.