தம்பலகாமத்தில் பொங்கல் விழா

-கிண்ணியா நிருபர்-

தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவானது விசேடமான முறையில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பிரதேச செயலக வளாகத்தில் பெற்றது.

சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் விசேட பூஜையும் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.