
தம்பலகாமத்தில் பெய்த கனமழையால் வீட்டின் மீது சரிந்து விழுந்த மரம்!
-கிண்ணியா நிருபர்-
காற்று, இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தமையால், தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் சிராஜ் நகரில் வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
மிக நீண்ட நாட்களின் பின், நேற்று வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
