
தம்பலகாமத்தில் நீர்வளங்கள் முகாமைத்துவ திட்டத்தின் கீழ் வாய்க்கால்களை புனரமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
உலக வங்கியின் 4,750,000 ரூபா நிதியுதவியில் நீர்ப்பாசன அமைச்சின் ஒருங்கிணைந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ திட்டத்தின் கீழ் வாய்க்கால்களை புனரமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக தம்பலகாமம் நிகழ்வு கல்மெடியாவ பிரதான குளத்திலிருந்து வயல்களுக்கு நீர் செல்லும் வாய்க்கால் துப்பரவு செய்யும் பணி நேற்று வியாழக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் பல ஏக்கர் நெற்செய்கைக்கான நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இதனை மாகாண நீர்ப்பாசன திணைக்களம் அமுல்படுத்துகிறது.
மேலும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம, மாகாண நீர்ப்பாசன விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முதுபண்டா, தம்பலகாமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட நீர்ப்பாசன பொறியியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


