தமிழ் மொழித் தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

-மட்டக்களப்பு நிருபர்-

கிழக்கு மாகாண தமிழ் மொழி தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் 17 கல்வி வலயப் பாடசாலைகளில் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண தமிழ்த் தினப் போட்டி நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயம் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி 17 இடங்களைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதன்மைக் கல்வி வலயமாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு மாகாண மட்டத்தின் நடத்தப்பட்ட தமிழ்த் தினப் போட்டி நிகழ்ச்சிகளில் 15 முதல் இடங்களும் 6 இரண்டாவது இடங்களும் 5 மூன்றாவது இடங்களுமாக மொத்தமாக 17 இடங்களைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதன்மைக் கல்வி வலயமாக வரலாற்று சாதனை படைத்த பாடசாலை மாணவர்களையும் , பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில்
மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் என்.ஹரிஹரராஜ், மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் உட்பட வலயக் கல்வி அலுவலக கல்வி அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்