தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பொது வேட்பாளருக்கு வாக்களிப்பாளர்களா? – கிருஸ்ணபிள்ளை

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மாறி மாறி வருகின் சிங்கள தலைவர்களுக்கு வாக்களித்து பலன் ஏதும் கிடைக்கவில்லை, தற்போது பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளமை வரவேற்க தக்க விடயம் என ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.

மேலும் பொது வேட்பாளர் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

பெரும்பான்மை சமூகத்திற்கு வாக்களித்து எந்த பலனும் கிடைக்காதவிடத்து தற்போது பொது வேட்பாளரை நியமித்தமை சிறந்த விடயம் என்றாலும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து தற்போது களமிறக்கப்பட்டுள்ள பொது வேட்பாளருக்கே வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குறியான விடயம்.

மேலும் ஆரம்ப காலத்தில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் கட்சியாக உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சி பிற்காலத்தில் பதவி மோகம் பிடித்த தமிழ் தலைவர்களால் அளுக்கொரு பக்கம் திசைமாறி சென்றுவிட்டது. என்னை போன்றவர்களையும் திசை மாற செய்தார்கள்  என்று தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்