தமிழ் மக்களுக்கான தீர்வினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்க முடியாது!

சிங்கள ஆதிகத்திலிருந்து விடுபட்டுத் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாறுபட்டதொரு இடதுசாரி கொள்கையைக் கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழ் மக்களின் ஆதரவு தொடர்ந்தும் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.