தமிழ் மக்களின் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு!

 

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான கொழும்பில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்ரர் ஹவுசில் பிராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சந்தித்து உரையாடியிருந்தார்.

இதன் போது வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள்எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது

அதில் முக்கியமாக மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் , அரசியல் கைதிகள், செம்மணி, காணிப்பிரச்சனைகள், இராணுவத் தலையீடு தொடர்பிலும், நடந்து முடிந்த ஹர்த்தால் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதனுடன் அரசின் வட கிழக்குக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.