தமிழ் பொது வேட்பாளர் என்பதில் வெற்றி : இது தமிழர்களின் வெற்றி – செல்வம்

அரியநேந்திரனின் பெற்ற வாக்குகள் தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வெற்றி என்பதோடு நாடாளுமன்ற தேர்தலிலும் பொது கட்டமைப்பினூடாக களமிறங்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் திரட்சியையும் ஓர் அணியில் தமிழ் மக்கள் திரள வேண்டும் என்கின்ற ஒரு நற்செய்தியையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு பலப்பரீட்சை எமது தேசத்தில் இடம்பெற்றது.

இதற்கு தமிழ் மக்கள் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றார்கள். அவருக்கு இதுவரை கிடைத்த 210,662 வாக்குகள் என்பது ஒரு வெற்றியின் முதற்படியாகவே கருதுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த பொதுக் கட்டமைப்பின் ஊடாகவே நாம் தேர்தலை சந்திப்போம். இது மக்களின் ஒரு திரட்சியான வெளிப்பாடாக இருக்கும் என்பதோடு ஒற்றுமையை விரும்பாத கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதையும் பாராளுமன்றத் தேர்தல் வெளிப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.