தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் அதனை தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்கு பதிலாக ஒக்டோபர் 29ஆம் திகதி பாடசாலை நடாத்தப்படும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.