தமிழ் நாடு வழங்கும் நிவாரணப் பொருட்கள் நாளை நாட்டை வந்தடையும்

தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 2 பில்லியன் ரூபா பெறுமதியான முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல், நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையும், என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

குறித்த கப்பலில், 9 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, 50 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 25 மெற்றிக் தொன் மருந்து பொருட்கள் அதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிவாரணப் பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் இலங்கை தரப்பினரிடம் கையளிக்கப்படும், என்பது குறிப்பிடத்தக்கது.