தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

-யாழ் நிருபர்-

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர், மகளிர் அணிச் செயலாளர் திருமதி கிருபா கிரிதரன் யாழ். மாட்ட அமைப்பாளர் தீபன் உட்பட நால்வர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மருதங்கேணி விவகாரம் தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இரணைமடு சந்தியிலுள்ள மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் நேற்று வியாழக்கிழமை காலை 9.45 மணி தொடக்கம் 2.00 மணி வரை இவர்களது வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

வாக்கு மூலம் பெற்ற பின் அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவர்களை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.