தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் தரம்1, மற்றும் தரம் 2ல் கல்வி பயிலும் மாணவர்களால் நேற்றைய தினமும் இன்றையநேற்று வியாழக்கிழமை மற்றும் இன்று வெள்ளிக்கிழமை சித்திரை புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகள் செயற்பாட்டு ரீதியாக வெகு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
அரச பாடசாலைகளில் தரம் 1மற்றும் தரம் 2ல் கல்வி பயில்கின்ற மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் சித்திரை புதுவருட நிகழ்வினை பாடசாலைகளில் கொண்டாட வேண்டும் என்ற கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைய ஒவ்வொரு பாடசாலைகளிலும் சித்திரை புதுவருட நிகழ்வுகள் இந்த பருவ காலத்தில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திலும் சித்திரை புதுவருட கொண்டாட்ட நிகழ்வானது வித்தியாலய முதல்வர் கை. தெய்வேந்திரகுமார் தலைமையில் ஆசிரியர்கள், 1ம், 2ம் தர மாணவர்கள் அம் மாணவர்களின் பெற்றோர்களின் பங்கு பற்றுதலுடன் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
சித்திரை புதுவருட கொண்டாட்ட நிகழ்வில் வலுவூட்டப்பட்ட பாடசாலைகள் மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் திரு லச்சுதன், பாடசாலை முன்னாள் அதிபர் மா. சத்தியநாயகம், ஒய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் திரு அருள்ராசசிங்கம், வித்தியால ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது சித்திரை புதுவருட தினத்தன்று நிகழ்த்தப்படும் பல்வேறு சம்பிரதாய அம்சங்களும் சிறுவர்களுக்கான சில விளையாட்டுக்களும் இடம்பெற்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்