தமிழ் அரசுக் கட்சியின் உள்ளுராட்சி மன்ற விவகாரங்களை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட குழு கோறளைப்பற்று பிரதேச சபைக்கு விஜயம்

 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் உள்ளுராட்சி மன்றங்களின் விவகாரங்களை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட மட்டு மாநகர சபையின் முன்னாள் மேயர் சரவணபவன் தலைமையிலான குழுவினர் நேற்று திங்கட்கிழமை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு விஜமொன்றை மேற்கொண்டு கள ஆய்வு நடவடிக்கைகைளில் ஈடுபட்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர்களும் பிரசன்னமாயிருந்தனர்.

தமிழரசு கட்சியின் ஆழுகைக்குட்பட்ட 7 உள்ளுராட்சி மன்றங்களில் மாத்திரமே இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மக்களின் ஆட்சியை கைப்பற்றிய பிரதேசங்களிலே சிறந்த ஆட்சியை ஏற்படுத்தி சிறந்த முன்னுதரானமான சேவையை மக்களுக்கு கொண்டு செல்லவும் உள்ளுராட்சி சேவையை வலுப்படுத்தவும் கட்சி சார்பாகவும் இவ் நடவடிக்கை முன்னெடுப்பதாகவும் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக தவிசாளர் சு.சுதாகரன் தெரிவிக்கையில்,

அந்த வகையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையினால்; கடந்த காலத்தில் வருமானங்களை ஈட்டக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும் கடந்த காலத்தில் நிர்வாகித்த ஆட்சியாளர்களின் அசம்மந்த போக்கு காரணமாக வருமானங்கள் ஈட்டப்பட்டமை மந்த கதியிலேயே இருந்துள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு சில வகையான தீர்மானங்கள் இன்று வருகை தந்த குழவினரால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவற்றில் சில பாசிக்குடாவில் உள்ள சற்றுலா விடுதிகளுக்கு அவர்கள் ஈட்டும் வருமானத்தில் ஒரு வீதம் வரி அறவிடுவதெனவும், மீன் பிடி கூட்டுத்தாபன வியாபாரிகளிடமிருந்து இது வரை அறவீடு எதுவும் அறவிடப்படவில்லை எனவும் அதனை பரிசிலித்து வரிஅறவிடுதெனவும், பிரதேசத்தில் காணப்படும் ஜஸ் தொழிற்சாலைகளுக்கு எவ்வாறு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது என்பது தொடர்பாக கலந்துரையாடியதுடன் அவர்களிடமிருந்து வரி அறவிடுவது தொடர்பாவும் அறவிடப்படும் பணம் இலஞ்சம் ஊழற்ற வகையில் மக்கள் சேவைகளுக்காக பயன்படுத்தப்படும், என தெரிவித்தார்.

நிதி நிலைமை, வருமானம் ஈட்டும் வழிகள், எதிர் கால செயல் திட்டங்கள், நடவடிக்கைகள் தொடர்பாக சபை நிர்வாகத்துடன் கலந்துரையாடப்பட்டது.