
தமிழ்ப் பொதுவேட்பாளர் நேர வீணடிப்பு:பிள்ளையான்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில அரசியல் கட்சிகளில் இன்னும் தடுமாற்றங்கள் காணப்படுகின்றன.
அவர்களும் சிறுபான்மைக் கட்சி என்ற அடிப்படையில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பெருமளவான வெற்றி கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடு மட்டுமல்லாது நாட்டு மக்களைக் குழப்பும் வகையிலான செயற்பாடு என்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
