தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொதிகள்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையில் நிவாரணப் பொதிகள் அனுப்பப்படவுள்ளது.

இந்நிலையில், ‘தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்’ என்று அச்சிடப்பட்டுள்ள நிவாரண பொதிகள் தயார் நிலையில் உள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த நிவாரண பொதிகள் இம்மாதம் 22ம் திகதிக்கு பின்னர் இலங்கை மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.