தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் உதவி

-கிளிநொச்சி நிருபர்-

பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மையில் குடும்பத் தலைவர்கள் அகால மரணம் அடைந்த இரண்டு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் மற்றும் கனடா கிளை உறுப்பினர்களின் நிதி பங்களிப்பில் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வலி தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட இணுவில் மற்றும் உடுவில் கிராமங்களில் வசிக்கின்ற இரண்டு குடும்பங்களுக்கு குறித்த அத்தியாவசிய பொருட்கள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டன. உதவிகளை வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரவதனி ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் வழங்கி வைத்தனர்.

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP