
தமிழரசு கட்சி கோரிக்கை : தாய்லாந்து பிக்குமாரின் நிகழ்வு இடம் மாற்றம்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை நகரில் நெல்சன் தியட்டருக்கு அருகில் நடைபெறவிருந்த தாய்லாந்து பிக்குமாரின் பிரித்து ஓதும் நிகழ்வும் பாதயாத்திரை செல்லும் வழித்தடமும் மாற்றப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ். குகதாஸன் தெரிவித்தார்.
தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடத்தை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது
தமிழரசு கட்சி குழுவினருக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையிலான சந்திப்பின் போது அரசாங்க அதிபர் இந்த உறுதி மொழிகளை வழங்கினார். எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சம்பந்தன், தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோடு மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் விளைவாகவே இம்மாற்றம் இடம்பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
