தமிழரசுக் கட்சியின் மூதூர் வேட்பாளர் அறிமுகம்

-மூதூர் நிருபர்-

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் காட்சி சார்பாக மூதூர் பிரதேச சபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு மூதூர் -இரால்குழியில் உள்ள மாதர் சங்க கட்டிடத்தில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன் தலைமையில் இவ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் பின்னர் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் –

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 3 சபைகளில் தமிழரசு கட்சி ஆட்சி அமைக்கும்.மூதூர்,குச்சவெளி பிரதேச சபைகளில் கணிசமான பங்களிப்பை வகிக்கும் என தெரிவித்தார்.இலங்கை தமிழரசு கட்சி அதிகார பரவலாக்கத்திற்காக போராடுகின்ற கட்சியாகும்.அந்தந்த கட்சி கோட்டங்களுக்கு சரியான வேட்பாளர்களை நிறுத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.

வேட்பாளர் தெரிவுகளில் சரியான முறையையே நாங்கள் கையாண்டிருக்கின்றோம்.அதனால்தான் எமது வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.எமது கட்சி வெற்றி பெறுவதற்கான உத்திகளை நாங்கள் கையாண்டிருக்கின்றோம் அதனை வெளிப்படையாக சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.