
தமிழரசுக் கட்சிக்கு எதிரான பிரேரணை பாராளுமன்றத்தில் முறியடிப்பு!
தமிழரசுக் கட்சிக்கு எதிரான பிரேரணை பாராளுமன்றத்தில் முறியடிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பெயர்களை வைத்து இவ் கட்சிகள் இலங்கையில் பதிவில் இருக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வில் ஓர் பிரேரணை ஒன்றினை கொண்டு வந்திருந்தார்.
இவ் பிரேரணை ஆனது நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு கடுமையான விவாதங்களுக்கு மத்தியில் முறியடிக்கப்பட்டது.
பல கட்சிகளின் ஆதரவாக வாக்களித்தன.
அதே போன்று 2009 ஆண்டளவில் தமிழரசுக் கட்சியினை தடை செய்ய வேண்டும். என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது அதனை எதிர்த்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவினால் இவ் விடயம் கையாளப்பட்டு இதற்கான வழக்கினை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் அதனை எதிர்த்து வாதிட்டு வெற்றிகரமாக முறியடித்தார்கள்.