
தமிழரசுக்கட்சியின் செயலாளராக திருகோணமலை மாவட்ட உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார்
திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டத்தில் மத்தியகுழுவால் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளராக திருகோணமலை மாவட்ட உறுப்பினர் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக செயலாளர் பதவி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செயலாளராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும்,
சிரேஷ்ட உப தலைவர் : சி வி கே சிவஞானம்
இணை பொருளாளர்கள் : ஞா.சிறிநேசன், கனகசபாபதி
துணைத் தலைவர்கள் : K. V.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், அரியநேந்திரன், சத்தியலிங்கம்
இணை செயலாளர்கள் : திருமதி சாந்தி, சிறிஸ் கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் 13 உறுப்பினர்களும் மத்தியகுழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த தெரிவுகள் தொடர்பாக பொதுச்சபையில் அறிவித்தபோது, அதை உறுப்பினர்கள் ஏற்கவில்லை எனவும் பாரிய வாதப்பிரதிவாதங்ஙள் இ;டம்பெற்று அங்கு குழப்பமான சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பு நிகழவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
