தமிழக முதல்வர் மீது விஜய் குற்றச்சாட்டு

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் .

இதனையடுத்து கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தமிழக வெற்றிக் கழகம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தநிலையில், கரூர் துயரம் குறித்து விஜய் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில் “எங்களுக்கு தரப்பட்ட இடத்துல நாங்க பேசிட்டு இருந்தோம்.அதை தவிர நாங்க எந்த தவறும் செய்யல. எங்க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள் மேல FIR…அது மட்டுமில்ல சமூக வலைத்தளங்களை சேர்ந்த நண்பர்கள் மேல FIR போட்டு புடிச்சிட்டு இருக்காங்க.CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள். அவங்க மேல கை வைக்காதீங்க. நா வீட்டுல இருப்பேன் இல்லைனா ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணா பண்ணுங்க. நண்பர்களே, தோழர்களே, நம்மோட அரசியல் பயணம் இன்னும் வலிமையாகவும் தைரியமாகவும் தொடரும்” என்று குறிப்பிட்டார்.