தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்!
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவ படகுகளுக்கு இழப்பீடு வழங்காத இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு எதிராக இராமேஸ்வர அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அதேநேரம், அண்மையில் கைதான 16 மீனவர்களையும் விடுவிக்க அழுத்தம் கொடுக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
