தமிழக பா.ஜா.க தலைவர் இலங்கை வருகை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜா.க தலைவர் அண்ணாமலை இலங்கை வந்துள்ளார்.

மறைந்த தலைவர்களான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர், இந்தியாவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தொழிலாளர் கங்கிரசுடன் காலம் தொட்டு நட்புறவை ஏற்படுத்தி வைத்திருந்தனர்.

அதன் விளைவாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்தியாவில் இருந்து மலையக மக்கள் சார்ந்த உதவிகளை முதல் முதலாக இலங்கை பெற வழிவகுத்தது.

அதன்படி, இன்று சனிக்கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரதிநிதியாக அண்ணாமலை  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இலங்கை வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.