
தபால் மா அதிபர் முகத்தில் மிளகாய் பொடி வீசி கொள்ளையிட முயற்சி
மெதகொடவில உப தபால் நிலையத்திற்கு சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தபால் அலுவலக பெண்ணை மிளகாய் பொடியால் தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளதாகவும் மாத்தறை பொது வைத்தியசாலையில் தபால் மா அதிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
முகத்தை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மெத கொட்வில தபால் நிலையத்திற்கு வந்த சந்தேக நபர் ஏதோ தகவல் கேட்கும் முகமாக தபால் மா அதிபரின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி தாக்கி விட்டு அங்கிருந்த பணத்தை திருட முயன்றுள்ள போது, போஸ்ட் மாஸ்டர் அவருடன் சண்டையிட்டு பணப்பையை காப்பாற்றியுள்ளார்.
குறித்த பையில் அறுபதாயிரம் ரூபாய்க்கும் அதிக பணம் இருந்ததாக கூறப்படும் நிலையில், சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திருட்டு முயற்சி தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
