
தபால் நிலைய ஊழியர்கள் நால்வரால் யுவதியொருவர் துஷ்பிரயோகம்
ருவன்வெல்ல பிரதேசத்தில் 26 வயதுடைய யுவதி ஒருவர் நான்கு தபால் ஊழியர்களால் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த யுவதி தனது தாயுடன் ருவன்வெல்ல பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு இந்த யுவதிக்கு உதவி தேவைப்பட்டால் தெரிவிக்குமாறு கூறி அங்கிருந்த தபால் நிலைய ஊழியரான இளைஞர் ஒருவர் தனது தொலைபேசி இலக்கத்தை இந்த யுவதியிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் இருவரும் தொலைபேசியில் உரையாடி நட்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதன்பின் குறித்த இளைஞர் குறித்த யுவதியை கன்னந்தோட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
குறித்த இளைஞன் ருவன்வெல்ல மற்றும் இபுலான தபால் நிலையங்களில் பணிபுரியும் தனது நண்பர்கள் மூவரை இணைத்துக்கொண்டு குறித்த யுவதியை வன்புணர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்இ குறித்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
