தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால் திணைக்களத்தின் அறிவிப்பின்படி இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வரை இந்த செயன்முறை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலின் செயற்பாடுகள் காரணமாக தபால் ஊழியர்களின் விடுமுறையை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.