தபால் ஊழியரிடம் இருந்து 145 உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் மீட்பு

புத்தளத்தில் உள்ள தபால் ஊழியர் ஒருவர் 145 உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் வாக்காளர் தேர்தல் அமைப்பாளர் ஜேசுதாசனிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் புத்தளம் மாவட்ட தபால் அத்தியட்சகர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

விநியோகிக்கப்படாத வாக்குச் சீட்டுகள் தபால் அத்தியட்சகரினால் வர்த்தக நிறுவனமொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்