
தன்பாலின ஆசிரியையுடன் காதல்: வீட்டை விட்டு வெளியேறிய மாணவி
இந்தியாவில் ராஜஸ்தான், புகானிரில் தனியார் பாடசாலை ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி தன் பாலின ஈர்ப்பில் ஆசிரியையுடன் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டுள்ளார்.
புகானிரில் தனியார் பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவி காணாமல் போன அதே நாளில் ஆசிரியையும் பாடசாலைக்கு செல்லவில்லை. இதனால் பெற்றோர் மாணவியை அந்த ஆசிரியை தான் அழைத்து சென்றிருப்பார் என குற்றம்சாட்டினர். அதனைத் தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சிகள் போராட்டமும் நடத்தினர். இதற்கிடையில், ஆசிரியர் வீட்டிலும் அவரை காணவில்லை என புகாரளித்தனர்.
அதே வேளை ஆசிரியையும், மாணவியும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், நாங்கள் தன்பாலின் ஈர்ப்பு உடையவர்கள் எனவும் இருவரும் பரஸ்பரம் சம்மதத்துடனே குடும்பத்தினருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தனர். தங்களை நிம்மதியாக வாழ விட வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
அதனையடுத்து, இருவரும் சென்னையில் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டனர். மேலும் பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
