தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட பாட்டி

அமெரிக்காவின் வயோதிப பெண்மணி ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த டோரதி “டாட்டி” ஃபிடெலி  எனும் 77 வயதான பெண்ணே இவ்வாறு திருமணம் செய்துள்ளார்.

டாட்டி தனது திருமணத்தை ஓஹியோவின் கோஷனில் தான் வாழும் முதியோர் இல்லமான O’Bannon  டெரஸ் ஓய்வு சமூகத்தில் மே 13 ஆம் திகதி நடத்தியுள்ளார். இந்தத் திருமண விழாவில் அண்டை வீட்டார்இ நண்பர்கள் மற்றும் குடும்பத்தினகலந்துகொண்டனர்.

தனது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை நிறைவேற்ற தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார்.

முன்னதாக டாட்டி 1965 இல் திருமணம் செய்து கொண்டுள்ளதுடன்  ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது கணவருடன் விவாகரத்து ஆகிய பின்னர் வேறு திருமணம் செய்யாது வசித்து வந்துள்ளார்.

ஆனால், திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பிய அவருக்கு எதுவும் சரியாக அமையவில்லை.

மூன்று குழந்தைகளுக்கு தாயான டாட்டி, ஒரு  நிகழ்ச்சியில் ஒரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வதைப் பற்றி கேள்விப்பட்ட நிலையில் அது நல்ல யோசனையாக இருந்ததமையால்  தானும் அதேபோல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்.

தனது திருமணம் குறித்து திட்டமிட்ட டாட்டி, அவரது ஓய்வு இல்லத்தின் சொத்து மேலாளரான ராப் கெய்கரின் உதவியுடன் அவரது திருமணம் சிறப்பாக நிறைவடைந்துள்ளது.

தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தன் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளைக் கவனித்துக் கொண்டதில் கழித்த பின்னர் தனது வாழ்க்கை இனி தன்னை பற்றி மட்டுமே நகரும் என்று உற்சாகமாக  டாட்டி மகிழ்ச்சியடைந்துள்ளார்.

தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட பாட்டி

தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட பாட்டி

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்