தனுஷ்க மீதான 3 பாலியல் குற்றச்சாட்டுகள் வாபஸ்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சில குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற அவுஸ்திரேலிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி 4 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் 3 வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணத்தின் போது, ​​அவுஸ்திரேலிய பெண்ணுடன் நட்புறவு கொண்ட தனுஷ்க குணதிலக, அவரது அனுமதியின்றி பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை சிட்னியில் உள்ள Downing Centre நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு ஜூலை 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்