
தனிஷ் அலிக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனிஷ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன கலையகத்திற்குள்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டில் தனிஷ் அலி கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேக நபருக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்க போதுமான தகவல்களை இல்லை என தெரிவித்த கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க, சந்தேக நபரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபா அடங்கலான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, தனிஷ் அலியை கறுவாத்தோட்டம் காவல்நிலையத்துக்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
