
தனியார் வைத்தியசாலைகளில் திடீர் சோதனை
-அம்பாறை நிருபர்-
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இணைந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படுகின்ற தனியார் வைத்தியசாலைகளில் எழுமாறான பரிசோதனைகளை மேற்கொண்டனர்
மருந்துகளின் விலை, காலாவதி திகதி, மயக்க மருந்துகளின் பாவனை, களஞ்சியப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நீண்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த விஜயத்தில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மெலிண்டன் கொஸ்தா, கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ. எல்.எம் றிபாஸ் , சுற்றுச்சூழல் மற்றும் தொழில்வாண்மை சுகாதாரப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம் பௌசாத், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா மற்றும் பிராந்திய மேற்பார்வை மருந்தாளர் திருமதி இந்திரகுமார் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

