தனியார் வகுப்புக்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான முக்கிய அறிவித்தல்
-அம்பாறை நிருபர்-
கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நடவடிக்கைகளினையும் தற்காலிகமாக இடைநிறுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.
இதற்கமைய கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும், தரம் 01 தொடக்கம் தரம் 10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளினையும், இன்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முஸ்லிம்களின் புனித நோன்பு மற்றும் தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பு போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளினைக் கொண்ட இம்மாதமானது அதிக உஷ்ணம் நிறைந்ததாக காணப்படுகின்ற போதிலும், கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பொருத்தமற்ற நேரங்களில் தொடர்ச்சியான வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருவதானது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதாக மத அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து எமக்கு தொடர்ச்சியாக கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்