
தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகளுக்கிடையில் மோதல்: இருவர் வைத்தியசாலையில்
-பதுளை நிருபர்-
பதுளையில் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதி மற்றும் நடத்துநர்களுக்கிடையே நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர்.
சொரணாதொட்ட மற்றும் ஹம்பாவெல பகுதியை சேர்ந்த 40,38 வயதுடையவர்களே காயமடைந்துள்ளதுடன் 57,54 வயதுடைய தனியார் பேருந்தின் சாரதியும் நடத்துநரும் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளையில் இருந்து முத்தேட்டுகமைக்கு செல்லும் தனியார் பேருந்தும்இஅதே பகுதிக்கு செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் இடையே நேர சூசி தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பில் மாறியுள்ளது.
இதன் போது தனியார் பேருந்தின் சாரதியினால் அரச பேருந்தின் சாரதியும் நடத்துநரும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
